`என் ஏழ்மை அவர்களின் படிப்பைப் பாதிக்கல!' - நீதிபதியான மகளை நினைத்து நெகிழும் ஆட்டோ டிரைவர்

ஆட்டோ ஓட்டுநரின் மகள்

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்டோ டிரைவரின் மகள் நீதித்துறை தேர்வில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்.

2016ம் ஆண்டின் உத்தரகாண்ட் நீதித்துறை சேவை சிவில் நீதிபதி (ஜூனியர் பிரிவு) தேர்வுக்கான இறுதி முடிவு கடந்த பிப்ரவரி 28ம் தேதி வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியாகி சற்று நேரத்தில் அசோக் குமாரின் வீடு விழாகோலம் பூண்டது. 

ஆட்டோ ஓட்டுநரின் மகள்
 

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூன் பகுதியில் நேரு காலனியில் அமைந்துள்ளது அசோக் குமாரின் சிறிய வீடு. அவருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். ஆட்டோ ஓட்டுநரான அசோக் குமார் தன் நான்கு பிள்ளைகளின் படிப்பிலும் அதிக கவனம் செலுத்தினார். அதன் விளைவாக அவரின் செல்ல மகள் பூனம் நீதித்துறை தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்று தந்தைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

மகளின் சாதனை குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அசோக் குமார், ‘நான் ஆட்டோ ஓட்டுநர். ஒருநாளைக்கு ரூ.300 கிடைக்கும். பிள்ளைகள் விருப்பப்படுவதை எல்லாம் வாங்கிக் கொடுக்க முடியாத சூழல். ஆனால், என் ஏழ்மையால் அவர்களின் படிப்பை எந்த விதத்திலும் பாதிக்கவிடவில்லை. என் இளைய மகள் பூனம் தோடியை எல்.எல்.பி மற்றும் எம்.காம் படிக்க வைத்தேன். போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்தினேன். என் மகளின் நீதிபதி ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறிவிட்டது. எல்லாப் பிள்ளைகளும் தங்கள் பெற்றோருக்கு இதுபோன்று பெருமை சேர்க்க வேண்டும். இது ஒரு உன்னதமான உணர்வு. வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை’ என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!