காவிரி தீர்ப்பு!- அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டும் கர்நாடகா

காவிரித் தீர்ப்புகுறித்து விவாதிக்க, கர்நாடகாவில் மார்ச் 7-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

சித்தராமையா

 

காவிரி நதிநீர்ப் பங்கீட்டு வழக்கை விசாரித்துவந்த உச்ச நீதிமன்றம், கடந்த 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில், தமிழகத்தின் ஒதுக்கீட்டை 14.75 டி.எம்.சி அளவுக்கு நீதிபதிகள் குறைத்தனர். அந்தத் தண்ணீர், பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டது. 

இது, தமிழக அரசியல் தலைவர்கள், விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் கடந்த 22-ம் தேதி அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பிரதமரை சந்திப்பது என முடிவுசெய்யப்பட்டது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது. ஆகவே, அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட, அம்மாநில முதல்வர் சித்தராமையா முடிவுசெய்துள்ளார். வரும் 7-ம் தேதி, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!