வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (05/03/2018)

கடைசி தொடர்பு:00:00 (05/03/2018)

சாதனை வீராங்கனையை கவுரவப்படுத்திய சந்திரசேகர் ராவ்!

உலக ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெண்கலம் வென்ற வீராங்கனை அருணா ரெட்டிக்கு ரூ.2 கோடி பரிசு வழங்கி தெலுங்கானா அரசு கவுரவப்படுத்தியுள்ளது.

அருணா ரெட்டி

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் உலக கோப்பை ஜிம்னாஸ்டிக் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவை சேர்ந்த அருணா புத்தா ரெட்டி வெண்கலம் வென்று அசத்தினார். ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பையில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவாகும். முன்னதாக காமன்வெல்த், ஏசியன் கேம்ஸ் உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றாலும் அப்போது அவர் பதக்கம் வெல்லவில்லை. தற்போது இதை முறியடித்துடன் சர்வதேச போட்டிகளில் முதல் பதக்கத்தை பெற்று மெல்போர்ன் நகரில் இந்தியாவை பெருமை அடைய செய்துள்ளார் 22 வயது இளம் வீராங்கனை அருணா ரெட்டி. இதனால் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில் சாதனை வீராங்கனையான அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் என்பதால் தெலுங்கானா அரசு இன்று அவரை கவுரவப்படுத்தியது. தெலுங்கானா தலைமைச்செயலகத்துக்கு இன்று அவரை வரவழைத்த முதல்வர் சந்திரசேகர் ராவ் அவருக்கு வாழ்த்து கூறியதோடு, இரண்டு கோடி பரிசு தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அப்போது பதக்கத்தை முதல்வரிடம் கொடுத்து அருணா ஆசி பெற்றுக்கொண்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க