குடியரசுத் தலைவர் காருக்கும்  நெம்பர் பிளேட் கட்டாயம்..!


குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பயன்படுத்தும் கார்களின் பதிவு எண்கள் கண்ணுக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கார் எண்


புதுடெல்லியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ''குடியரசுத் தலைவர், துணை குடியரசுத்தலைவர், ஆளுநர்கள், வெளியுறவுத்துறை அமைச்சரக வாகனங்கள், மோட்டார் வாகன சட்டப்படி பதிவு செய்யப்படுவது இல்லை. இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களின் பதிவெண்கள் வெளியே தெரியும்படி நெம்பர் பிளேட்களை பொறுத்த வேண்டும்.மோட்டார் வாகன சட்டத்தை பின்பற்றாத வாகனங்களை உடனே பறிமுதல் செய்ய வேண்டும்'' என்று கூறி இருந்தனர்.

இந்த வழக்கு தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தாக்கல் செய்த  மனுவில், ''அனைத்து வாகனங்களும் மோட்டர் வாகன சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து அனைத்து அலுவலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது'' என்று கூறியிருந்தனர். வெளியுறவுத்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ''வெளிநாட்டு தலைவர்கள் இந்தியா வரும் போது அவர்கள் பயன்படுத்த 14 கார்கள் உள்ளது. அவை விரைவில் பதிவு செய்யப்படும். குடியரசு தலைவர், துணைக் குடியரசுத்தலைவர், ஆளுநர் கார்களின் எண்கள் வெளியில் தெரியும் படி வாகனங்களில் வைக்க அறிவுறுத்தப்படுள்ளது' என்று சொல்லி இருந்தார்கள். இதையடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!