வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (05/03/2018)

கடைசி தொடர்பு:02:00 (05/03/2018)

80 சதவிகித வங்கி கணக்குகள் ஆதார் நம்பருடன் இணைப்பு - UIDAI தகவல்!

80 சதவிகித வங்கி கணக்குகள், 60 சதவிகித மொபைல் எண்கள் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக UIDAI-ன் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆதார்

வங்கி கணக்குடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு மார்ச் 31-ம் தேதி கடைசி நாள். இதற்கிடையே மக்கள் ஆதார் எண்களை இணைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் UIDAI-ன் அதிகாரி  80 சதவிகித வங்கி கணக்குகளும், 60 சதவிகித மொபைல் எண்களும் ஆதார் எண்னுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.  மேலும், மொபைல் எண்களுக்கும் மார்ச் 31-வரை அவகாசம் இருப்பதால் மொபைல் எண்னும், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. 109.9 கோடி வங்கிக் கணக்குகளில் 87 கோடி வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன. அதில் 58 கோடி வங்கிக் கணக்குகளில் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்கள் உறுதி செய்யப்பட்டு விட்டன. 142.9 கோடி மொபைல் எண்களுடன் 85.7 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை UIDAI-ன் சி.இ.ஓ அஜய் பூஷண் பாண்டே உறுதி செய்துள்ளார்.