காவிரி, மாநில அந்தஸ்து விவகாரங்கள்! - முதல் நாளிலேயே முடங்கியது நாடாளுமன்றம் #BudgetSession

மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை

 

மாநிலங்களவையில் அதிமுக எம்.பிக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியதால் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி குறித்து அவையில் எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பி அமளியில் ஈடுபடுவார்கள் என முன்னரே எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று  மாநிலங்களவை கூடியதும் அ.தி.மு.க எம்.பிக்கள் காவிரி விவகாரத்தை கையிலெடுத்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மைத்ரேயன், நவநீதகிருஷ்ணன், சசிகலா புஷ்பா உள்ளிட்ட உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்றுக் கூறி அவைத்தலைவரும் துணைக் குடியரசுத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவை முற்றுகையிட்டனர். ’அமைத்திடுக... அமைத்திடுக... காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடுக என முழக்கமிட்டனர். இதனையடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது. ‘காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனையடுத்து ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி தெலுங்கு தேச கட்சி  எம்.பி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டார். மீண்டும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 

இதனிடையே நீரவ் மோடி வங்கி மோசடியில் ஈடுபட்டதை சுட்டிகாட்டி எதிர்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.  மக்களவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!