வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (05/03/2018)

கடைசி தொடர்பு:14:52 (05/03/2018)

வேகத்தால் நேர்ந்த விபரீதம்! - வைரலாகும் வீடியோ

குஜராத்தில் இளைஞர்கள் இருவரின் அலட்சியத்தினால் கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

குஜராத் கார் விபத்து

Photo Credit : ANI

குஜராத் மாநிலம் மோர்பி பகுதியில் நேற்று (4.3.2018) இளைஞர்கள் 2 பேர் காரில் பயணித்துள்ளனர். காரை அவர்கள் மிக வேகமாக இயக்கியதாகத் தெரிகிறது. இதனால், சாலை திருப்பம் ஒன்றில் அவர்களால், காரைத் திருப்ப முடியவில்லை. கார் அதிவேகமாகச்  சென்றதால் அந்தத் திருப்பத்தில் திரும்ப முடியாமல் போனது. காரை நிறுத்த முயன்று, நிறுத்த முடியாமல் போகவே சறுக்கிக்கொண்டு சாலையின் நடுவே உள்ள தடுப்புமீது வேகமாக மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரில் பயணம் செய்த  இளைஞர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்துக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.