வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (05/03/2018)

கடைசி தொடர்பு:20:40 (05/03/2018)

பட்டப்பகலில் காங்கிரஸ் பெண் தலைவர் சுட்டுக்கொலை!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் தலைவரான முன்னி பேகம் (50), அடையாளம் தெரியாத நபர்களால் பட்டப்பகலில் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். 

சுட்டுக்கொலை

உத்தரப்

பிரதேச மாநிலத்தில் உள்ள பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர், முன்னி பேகம். அப்பகுதியின் காங்கிரஸ் பெண் தலைவராகப் பணியாற்றி வரும் இவர், கோட்வாலி எனும் பகுதியில் வசித்துவருகிறார். இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் இவரது வீட்டுக்குள் புகுந்து, துப்பாக்கியால் சரமாரியாக முன்னி பேகத்தைச் சுட்டுவிட்டு, தப்பிச்சென்றுள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே பேகம் உயிரிழந்தார். 

காங்கிரஸ் தலைவர் முன்னி பேகம், சென்ற ஆண்டு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டது தோல்வியுற்றார். இந்தக் கொலை, முன் விரோதம் காரணமாக நடைபெற்றிருக்கும் என்று போலீஸார் கருதுகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, அப்பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்திவருகின்றனர். முன்னி பேகத்தின் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.