ஆகாஷ் அம்பானிக்கு விரைவில் திருமணம்!

இந்தியக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு, விரைவில் திருமணம் நடைபெற உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆகாஷ் அம்பானி

மிகப்பெரிய வைர வியாபாரியான ரோஸி புளூ டைமண்ட்ஸ் நிறுவனத்தின் அதிபர் ருஷெல் மேத்தாவின் மகள், ஸ்லோகோ மேத்தா என்பவரை ஆகாஷ் அம்பானி திருமணம் செய்துகொள்ள இருப்பதாக, ரிலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ருஷெல் மேத்தா, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் நீரவ் மோடியின் உறவினர் ஆவார். 

முகேஷ் அம்பானி மற்றும் நீடா அம்பானிக்கு மொத்தம் 3 குழந்தைகள். இதில் மூத்தவர், ஆகாஷ் அம்பானி. இவருக்கு அடுத்தபடியாக ஈஷா என்ற இரட்டைச் சகோதரிகள் உள்ளனர். 26 வயதாகும் ஆகாஷ் அம்பானி, அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ளார். 

ரோஸி புளூ அறக்கட்டளை அமைப்பில் நிர்வாக இயக்குநர் பொறுப்பில் உள்ள ஸ்லோகோ மேத்தா, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயின்றவர். மேலும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ், கல்வி நிறுவனத்தில் பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவரும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!