வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (06/03/2018)

கடைசி தொடர்பு:11:17 (06/03/2018)

திருமண வீட்டுக்கு டிரக்கில் போன 25 பேர் பலி! - குஜராத்தை உலுக்கிய விபத்து

குஜராத்தில் பாவ்நகர் மாவட்டத்தில் டிரக் ஒன்று வாய்க்காலில் விழுந்ததில் 25 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.

குஜராத் விபத்து
 

பாவ்நகர் மாவட்டத்திலிருந்து 60 பேர் டிரக்கில் திருமணத்துக்குச் சென்றனர். உம்ராலா என்னும் இடத்தில் பாவ்நகர் - ராஜ்கோட் சாலையில் பாலம்மீது டிரக் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி கவிழ்ந்து வாய்க்காலில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 25 பேர் பலியானதாகப் பாவ்நகர் மாவட்டக் கலெக்டர் தெரிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க