`விலையோ கோடிகள்' - ஒபாமா பாணியில் சந்திரசேகர் ராவை பாதுகாக்க புல்லட் புரூஃப் பஸ்

சந்திரசேகரராவ்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்காக புல்லட் புரூஃப் வசதியுடன் கூடிய அதி நவீன பேருந்து பிரத்யேகமாக வடிவமைக்கப்படவுள்ளது.

தெலங்கானாவில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அம்மாநில முதல்வரின் பாதுகாப்பில் காவல்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது.  தெலங்கானா - சத்தீஸ்கர் எல்லையில் கடந்த வாரம் போலீஸாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தற்போது அவரின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில் குண்டு துளைக்காத பேருந்தை வடிவமைத்து வருகின்றனர்.

கடந்தாண்டு மாவோயிஸ்ட்களால் தெலங்கானா முதல்வரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி  4 கோடி ரூபாய் செலவில் குண்டு துளைக்காத மெர்சிடஸ் பென்ஸ் கார் அவருக்காகப் பிரத்யேகமாகக் கட்டமைத்தனர். இந்தாண்டு ஏழு கோடிகள் செலவு செய்து குண்டு துளைக்காத பேருந்தை அம்மாநிலத்தில் சாலை மற்றும் கட்டடத்துறை வடிவமைத்து வருகிறது. 

தெலங்கானாவில் இனிவரும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் முதல்வர் குண்டு துளைக்காத பேருந்தில்தான் பயணம் செய்வார் என்று கூறப்படுகிறது. பேருந்துக்குள் அனைத்து ஆடம்பர வசதிகளும் செய்யப்பட உள்ளனவாம். இதனிடையே எதிர்க்கட்சிகள் ’மாநில முதல்வருக்கு எதற்காக 7 கோடி செலவில் பேருந்து?’ என்று விமர்சித்து வருகின்றன.

Obama


அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாதான் அதி நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட வாகனங்களைப் பயன்படுத்துவார். அவரின் பாணியில் தற்போது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாதுகாப்பு வசதிகள் கொண்ட சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தி வருகிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!