ஒகி புயலால் இதுவரை 102 பேர் இறந்துள்ளனர்... மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு

 ஒகி புயலால் மாயமானவர்கள்  மற்றும் இறந்தவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கையைத் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் உருவான ஒகி புயல், தென்தமிழகத்தையே புரட்டிப்போட்டது. இதனால், கன்னியாகுமரி
மாவட்டம் மிகவும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது. புயலின்போது மீன்பிடிக்கச் சென்றவர்களில் 2,000-க்கும்
மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதலில் அஞ்சப்பட்டது. ஆனால், பிறகு ஒவ்வொருவராக மீட்கப்பட்டனர்.
சிலர், அரசாங்கத்தின் மூலமும் சிலர், தாமாகவும் கரை திரும்பினர்.

தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் மட்டும் அதிகமானவர்கள் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. இதன் உண்மை நிலவரத்தை டிசம்பர் மாத இறுதியில் பாதுப்பாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல்செய்தார். அவர் தாக்கல்செய்த அறிக்கையில், காணாமல் போனவர்கள் மற்றும் காப்பாற்றப்பட்டவர்களின் தகவல்கள் மட்டுமே இருந்தது. தற்போது,  ஒகி புயலால் இறந்தவர்களின் எண்ணிக்கையை நாடாளுமன்ற மக்களவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதில், அனைத்து மாநில அரசுகள் தெரிவித்த தகவலின்படி, தமிழகத்தில் மட்டும் 60 மீனவர்கள் இறந்துள்ளனர், 102 மீனவர்கள் காணாமல்போயுள்ளனர். கேரளாவில், 42 மீனவர்கள் இறந்துள்ளனர், 191 பேர் மாயமாகியுள்ளனர். லட்சத் தீவுகளில் ஒருவரும் இறக்கவில்லை. காணாமல் போகவுமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!