வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (07/03/2018)

கடைசி தொடர்பு:13:09 (07/03/2018)

பிரதமரை 'ஸ்ரீ' என்று அழைக்காததால் எல்லைப்பாதுகாப்பு வீரரின் சம்பளம் கட்!

பிரதமர் மோடியை மரியாதை இல்லாமல் கூறியதற்காக எல்லை  பாதுகாப்பு படை வீரரின் 7 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்புப் படையில் பணியாற்றிவரும் வீரர்களுக்குத் தினமும்  ஜீரோ பரேட் என்ற வருகைப் பதிவு முறை நடக்கும். இந்த பரேடின்போது ’மோடி புரோகிராம்’ எனக் குறிப்பிட்டு வீரர்களின் வருகையைத் தெரிவிக்க வேண்டும்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையில் கடந்த மாதம் 21-ம் தேதி நடைபெற்ற ஜீரோ பரேடில் பங்கேற்ற ஒரு
கான்ஸ்டபிள், வருகை குறிப்பிடும்போது ஹானரபிள் பிரைம் மினிஸ்டர் மோடி புரோக்ராம் (மதிப்பிற்குரிய பிரதமர் மோடி) அல்லது ’ஸ்ரீ’ மோடி ('honourable' or 'Shri') எனக் கூறாமல், மோடி புரோக்ராம் என மரியாதை இல்லாமல் கூறியதால் அவரின் 7 நாள் ஊதியத்தை அபராதமாகச் செலுத்த பிஎஸ்எஃப் உத்தரவிடப்பட்டுள்ளது.