வெளியிடப்பட்ட நேரம்: 21:04 (07/03/2018)

கடைசி தொடர்பு:21:04 (07/03/2018)

நீட் போன்ற தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயமில்லை..! உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கு ஆதார் கட்டாயம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

நீட் உள்ளிட்ட மத்திய அரசின் தேர்வுகளை சி.பி.எஸ்.இ அமைப்பு நடத்திவருகிறது. அந்த அமைப்பு, இத்தகைய தேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் பதிலளித்த மத்திய தலைமை வழக்கறிஞர், 'சி.பி.எஸ்.இயால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு பாஸ்போட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்' என்று பதிலளித்தார். அதனைக் கேட்ட நீதிபதிகள், சி.பி.எஸ்.இ தேர்வுகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம் இல்லை. இதனை, சி.பி.எஸ்.இ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும்' என்று உத்தரவிட்டது.