`ஆடுகளை விற்று கழிப்பறை கட்டிய குன்வார் பாய்' - மகளிர் தினத்தில் நெகிழ்ந்த மோடி!

மகளிர் தினம், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், மகளிர்தின வாழ்த்தைப் பதிவுசெய்து, வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 

மோடி

’பெண்களின் ஆற்றல், சாதனைகளை நினைத்து நாம் கட்டாயம் பெருமைகொள்ள வேண்டும். பெண்களின் வளர்ச்சிதான், நாட்டின் வளர்ச்சி. பெண்கள், அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் அளிக்கிறார்கள். அவர்களின் முன்மாதிரியான செயல்கள், மனிதகுல வரலாற்றில் ஓர் அழிக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், உங்களை ஊக்குவித்த சில பெண்களைப் பற்றி எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தொடர்ந்து அந்தப் பதிவில், இந்த ஆண்டு தொடக்கத்தில் மரணமடைந்த, சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த குன்வார் பாய் (106 ), தனது ஆடுகளை விற்று, கழிப்பறை கட்டினார். ஸ்வச் பாரத் திட்டத்துக்கு, அவரது பங்களிப்பு மறக்க முடியாதது. அவரது செய்கை என்னை வெகுவாக ஈர்த்தது. 'தூய்மை இந்தியா' என்ற மகாத்மாவின் கனவை நனவாக்க முயற்சிக்கும் ஒவ்வொருவரின் மனதிலும் குன்வர் பாய் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். 

மோடி

அவர் சத்தீஸ்கர் சென்றபோது குன்வார் பாயிடம் ஆசிகளைப் பெற்றது, எப்போதும் மறக்க முடியாததாக இருக்கிறது என்று பதிவிட்டு, குன்வார் பாயிடம் ஆசிபெற்ற வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!