கர்நாடகாவுக்குத் தனிக்கொடி.. அறிமுகப்படுத்தினார் சித்தராமையா.. | Karnataka govt approves state flag.

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (08/03/2018)

கடைசி தொடர்பு:17:30 (08/03/2018)

கர்நாடகாவுக்குத் தனிக்கொடி.. அறிமுகப்படுத்தினார் சித்தராமையா..

கர்நாடகா மாநிலத்திற்கென ஒரு தனிக்கொடியை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

Credits : ANI

மஞ்சள், வெள்ளை, சிவப்பு என்ற நிறங்களுடன் மூன்று வண்னங்களில் கர்நாடக மாநிலத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறங்களுக்கு நடுவே கர்நாடக அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது. தங்கள் மாநிலத்திற்கென ஒரு தனிக்கொடி வேண்டும் எனக் கர்நாடக அரசு, மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன் பேரில் தங்களின் மாநிலக்கொடியை உருவாக்க ஒரு குழுவை அமைத்தார் சித்தராமையா. அந்தக் குழு தயாரித்து கர்நாடக கலைத்துறையிடம் அனுமதி பெற்று இன்று அந்தக் கொடியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார் கர்நாடக முதல்வர். மேலும், இந்தக் கொடி மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட உள்ளது. முன்னதாக மாநிலத்திற்கு என தனிக்கொடியை ஜம்மு-காஷ்மீர் மட்டுமே பெற்றிருந்தது. அதன் வரிசையில் அடுத்ததாக தற்போது கர்நாடகா இணைந்துள்ளது.