கருணைக்கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

உச்ச நீதிமன்றம்

கருணைக்கொலை செய்யக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது.

கருணைக்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்குகளின் விசாரணை முடிவடைந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.

அதன்படி, மீள முடியாத நோய் தாக்கத்தில் உள்ளவர்களைக் கருணைக்கெலை செய்யலாம் என்றும் நோயாளிகளின் மருத்துவ உபகரணங்களை அகற்றி உயிரிழக்க வைக்கலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

தீராத நோயுள்ளவர்களைச் சில விதிகளுக்குட்பட்டு மரணிக்க அனுமதிக்கலாம் என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், நலம் பெற வழி இல்லை என்றால் செயற்கை உயிர் காக்கும் முறைகளைக் கைவிட்டு உயிர் துறக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

மனிதர்கள் கண்ணியத்துடன் இறப்பதற்கு உரிமை உண்டு எனக் கருத்து தெரிவித்துள்ள நீதிபதிகள், புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை உச்ச நீதிமன்ற விதிகள் அமலில் இருக்கும் என்றும் தீர்ப்பளித்துள்ளனர். மேலும், கருணைக்கொலை செய்வதற்கு வழிமுறைகளையும் வகுத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!