பற்றி எரியும் கெமிக்கல் தொழிற்சாலை! பறிபோனது 3 தொழிலாளர்களின் உயிர்கள்

மகாராஷ்டிரா மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கெமிக்கல் தொழிற்சாலையின் பாய்லர் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

Credits : ANI

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு கெமிக்கல் தொழிற்சாலைகளும் உள்ளன. நேற்று இரவு 11 மணியளவில் பயங்கர சத்தத்துடன் கெமிக்கல் தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்துச்
சிதறியது. உயர் வெப்பநிலை மற்றும் உயர் அழுத்தம் காரணமாக பாய்லர் வெடித்ததாக அங்குள்ள தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் தொடர்ந்து தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.
நிலைமை தற்போது ஓரளவுக்குக் கட்டுப்பாட்டிற்குள் வந்தும் சில பகுதிகளில் தீ தொடர்ந்து எரிந்துகொண்டு இருப்பதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் படுகாயமடைந்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாவட்ட அதிகாரி பிரசாந்த் நார்னவாரே கூறியுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!