ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் வரலாற்றுச் சாதனை!

பாட்டியாலாவில் நடைபெற்றுவரும் ஃபெடரேஷன் தேசிய சீனியர் தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் அய்யாசாமி தருண் புதிய சாதனை நிகழ்த்தியதோடு, காமன்வெல்த் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.

தமிழக வீரர் தருண் புதிய சாதனை

21 வயது நிரம்பிய தருண் இலக்கை 49.45 விநாடிகளில் கடந்தார். போட்டியில், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் தமிழக வீரர்களே பெற்றனர். சந்தோஷ்குமார் வெள்ளிப்பதக்கமும் ராமச்சந்திரன் வெண்கலமும் வென்றனர். முன்னதாக, 2007-ம் ஆண்டு ஓசாகாவில் நடந்த போட்டியில் இந்திய வீரர் ஜோசப் ஆபிரஹாம் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 49.94 விநாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. 10 ஆண்டு கால சாதனையை அய்யாசாமி தருண் முறியடித்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியத் தொடர் ஓட்டக் குழுவிலும் தருண் இடம் பெற்றிருந்தார். 

சாதனை குறித்து தருண் கூறுகையில், ''போட்டிக்கு என்னைத் தயார்படுத்தும் விதத்தில் பிப்ரவரி 24-ம் தேதி பாட்டியாலா வந்தேன். திடீரென்று டைபாயிட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன்.  இதனால் முறையாகப் பயிற்சி பெற முடியவில்லை. மார்ச் 2-ம் தேதியில் இருந்துதான் மீண்டும் பயிற்சி எடுத்தேன். மார்ச் 6-ம் தேதி நடந்த 400 மீட்டர் ஓட்டத்தில்கூட 6-வது இடத்தைதான் பிடிக்க முடிந்தது. இந்த ஓட்டத்தில் வெற்றி பெறுவேன். காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெறுவேன் என்றும் நினைக்கவில்லை. எல்லாம்,  அதுவாகவே நடந்துள்ளது '' என்றார்.

இதற்கு முன், தருண் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தை 50.51 விநாடிகளில் நிறைவு செய்ததே சிறந்த ஓட்டம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!