வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (09/03/2018)

கடைசி தொடர்பு:14:21 (09/03/2018)

திரிபுரா முதல்வராகப் பதவியேற்ற முதல் பா.ஜ.க தலைவர் பிப்லாப் குமார் தேப்

சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்தது. இதனையடுத்து, திரிபுராவின் முதல் பா.ஜ.க. முதல்வராக பிப்லாப் குமார்  தேப் பதவியேற்றுள்ளார். 

பிப்லாப் குமார்  தேப்

திரிபுரா சட்டப்பேரவையில் உள்ள 59 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. மற்றும் ஐ.பி.எஃப், டி கூட்டணி 43 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. 25 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 16 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்று இத்தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது. 

மோடி

அதனையடுத்து, திரிபுரா முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான எம். எல்- ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதல்வராக பிப்லாப் குமார் தேப் என்பவரும், துணை முதல்வராக ஜிஷ்ணு தேபர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர். திரிபுராவில் ஆட்சி அமைக்க பிப்லாப் தேப் ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று பிப்லாப் குமார் தேப் முதல்வராகப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்பித்தார்.