'பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் இந்தியா வருகை' - நேரில் சென்று வரவேற்ற மோடி! | France's Emmanuel Macron Arrives In India, Gets PM Modi's Hug

வெளியிடப்பட்ட நேரம்: 05:29 (10/03/2018)

கடைசி தொடர்பு:05:29 (10/03/2018)

'பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் இந்தியா வருகை' - நேரில் சென்று வரவேற்ற மோடி!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் 4 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்றிரவு டெல்லி வந்த அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார்.

இமானுவேல் மேக்ரன் - மோடி

கடந்த ஆண்டு மே மாதம் பிரான்ஸின் அதிபராக பதவியேற்றார் இமானுவேல் மேக்ரன்.  இளம் வயதில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்ற பெருமையை பெற்ற அவர், உலக தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படுகிறார். இந்நிலையில் 4 நாள் அரசுமுறை பயணமாக நேற்றிரவு அவர் இந்தியா வந்துள்ளார். 4 நாட்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், நாளை பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். அப்போது இருநாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மேக்ரனை இந்தியாவுக்கு வரவேற்கும் விதமாக பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறேன். உங்களது வருகை இருநாடுகள் இடையிலான நட்புக்கு கூடுதல் வலுசேர்க்கும். நாளை நம் இருவர் இடையேயான பேச்சுவார்த்தையை எதிர்ப்பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக, தனது மனைவி பிரிஜ்ஜெட் ட்ரானெக்ஸ் உடன் டெல்லி விமான நிலையம் வந்த மேக்ரனை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார். சமீபத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேவ் இந்தியா வந்த போது, அவரை மோடி நேரில் சென்று வரவேற்காதது சர்ச்சையான நிலையில், தற்போது மேக்ரனை நேரில் சென்று வரவேற்றுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க