பாதுகாப்புத் துறையில் அதிக அளவில் பெண்கள் நியமனம்! - நிர்மலா சீதாராமன்

இந்தியப் பாதுகாப்புத் துறையில் அதிக அளவில் பெண்கள் நியமனம் செய்யப்படுவர் என பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

நிர்மலா சீதாராமன்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, டெல்லியில் பாதுகாப்புத் துறையில் உள்ள மருத்துவப் பிரிவின் பெண் அதிகாரிகள் சார்பில், விழா நடைபெற்றது. இதில், பங்கேற்றுப் பேசிய நிர்மலா சீதாராமன், சிறப்புவாய்ந்த பல்வேறு துறைகளில் பெண்கள் செயல்பட்டு, தங்களின் திறமைகளை நிரூபித்துவருவது மட்டுமல்லாமல், அந்தத் துறைகளில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்திவருகின்றனர். 

மேலும், இந்தியாவில் பலதரப்பட்ட சூழ்நிலைகள் உள்ளன. அதிலும், சிறப்பான பாதையில் பயணித்து பெண்கள் சாதித்துவருவது வியப்பளிக்கிறது. மேலும், இந்தியப் பாதுகாப்புப் படைப்பிரிவில்  அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். இதனால், பாதுகாப்புப் படைப்பிரிவில் அதிக அளவில் பெண்கள் நியமனம் செய்யப்படுவர் எனத் தெரிவித்தார். 

இந்நிகழ்ச்சியில், முதல் பெண் ஏர் மார்ஷலான பத்மாவதி பந்தோபாத்யா, உதவி கடற்படைத் தலைவரான புனிதா அரோரா மற்றும் லெப்டினன்ட் கர்னல் பரிதா ரஹ்மான் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!