அம்பேத்கர் சிலையின் தலை உடைப்பு! - உத்தரப்பிரதேசத்தில் மர்ம நபர்கள் அட்டூழியம்

உத்தரப்பிரசேத மாநிலத்தில் உள்ள அம்சார்க் எனும் பகுதியில், அம்பேத்கர் சிலையின் தலை உடைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சிலை

திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில், மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோசர் மூலம் மார்ச் 5-ம் தேதி அகற்றப்பட்டது. இது, காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஹெச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், ‘திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. நாளை, தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை உடைக்கப்படும்' எனப் பதிவிட்டார். 

உபி போலீஸார்

அதனால், அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பொதுமக்களும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும், திரிபுரா மற்றும் தமிழகத்தில் சிலை உடைக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சருடன் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார். அதன்பின், தனது கண்டனத்தையும் மோடி பதிவுசெய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சிலை உடைப்பு தொடர்பான சர்ச்சை அடங்குவதற்குள், இன்று உத்தரப்பிரசேத மாநிலத்தில் உள்ள அம்சார்க் எனும் பகுதியில் இருக்கும் அம்பேத்கர் சிலையின் தலையைத் துண்டித்து சேதப்படுத்தியுள்ளனர், மர்ப நபர்கள். இதையடுத்து, அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!