`நான் பிரதமராக இருந்தால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இப்படித்தான் கையாண்டிருப்பேன்!’ - ராகுல் காந்தி பளீச்

மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், ``நீங்கள் பிரதமராக இருந்திருந்தால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி அமல்படுத்தியிருப்பீர்கள்’’ என்று கேள்வி எழுப்பப்பட்டது. 

கறுப்புப் பண ஒழிப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எனக் கூறி, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ல், புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாமாண்டு தினத்தை, கறுப்பு தினமாக காங்கிரஸ் கட்சி அனுசரித்தது. 

இந்த நிலையில், மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுலிடம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நீங்கள் எப்படி அமல்படுத்தியிருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கு புன்னகையுடன் பதிலளித்த ராகுல், ``ஒருவேளை நான் பிரதமராக இருந்திருந்தால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைகுறித்த அறிக்கையோ அல்லது ஆவணமோ என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தால், அதை நான் குப்பைத்தொட்டியில் வீசியெறிந்திருப்பேன்’’ என்று கூறினார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!