இந்தியா, பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!

இந்தியா மற்றும் பிரான்ஸுக்கு இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. நான்கு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன்.

இம்மானுவேல் மக்ரோன்

நேற்று இரவு இந்தியா வந்த இம்மானுவேல் மக்ரோன், அவரின் மனைவி மற்றும் பிரான்ஸ் அதிகாரிகளை  பிரதமர் மோடி, டெல்லி விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார். இன்று, ஜனாதிபதி மாளிகையில் இம்மானுவேல் மக்ரோனுக்கு பாரம்பர்ய முறைப்படி சிவப்புக்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி வரவேற்றனர். 

மோடி

இதைத் தொடர்ந்து, இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரதமர் மோடி இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், இரு நாடுகளுக்கிடையே விண்வெளி, அணுஆயுதம், பொருளாதாரம், கடல்பாதுகாப்பு, ரயில்வே, தொழில், சூரிய மின்சக்தி உள்ளிட்ட 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன்பின், இருவரும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதில், பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே பல்வேறு ஒற்றுமைகள் உள்ளன. மேலும், பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து, பயங்கரவாதத்துக்கு எதிராகச் செயல்படுவோம் என்று தெரிவித்தனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!