''தாய்மொழியை போற்றி வளர்ப்போம்..!” - ஆர்.எஸ்.எஸ் புதிய பொதுச்செயலாளர் தலைமையில் தீர்மானம் | Need to protect and promote Bharatiya Languages: Rashtriya Swayamsevak Sangh

வெளியிடப்பட்ட நேரம்: 09:05 (11/03/2018)

கடைசி தொடர்பு:09:05 (11/03/2018)

''தாய்மொழியை போற்றி வளர்ப்போம்..!” - ஆர்.எஸ்.எஸ் புதிய பொதுச்செயலாளர் தலைமையில் தீர்மானம்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பொதுச்செயலாளராக சுரேஷ் என்ற பையாஜி ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாக்பூரில் நடந்த கூட்டத்தில் அவர் மீண்டும், அவ்வமைப்பின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

சுரேஷ்

 ''தாய்மொழி வழி கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அரசாங்கங்களும், கல்வி நிறுவனங்களும், இலாப நோக்கமற்று செயல்படும் சமூக அமைப்புகளும், மத அமைப்புகளும் தாய்மொழி உள்ளிட்ட இந்திய மொழிகளை முன்னிலைப்படுத்த வேண்டும்; வளர்க்க வேண்டும்'' என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர். எஸ்.எஸ் அமைப்பின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான செயல் திட்டம் குறித்து நாக்பூர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. புதிய தலைமை குறித்தும் விவாதங்கள் நடந்தது. அதில் ஒரு மனதாக, அவ்வவைப்பின் தேசிய பொதுச்செயலாளராக சுரேஷ் என்ற  பையாஜி ஜோஷி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ். தலைவராக மோகன் பகவத் இருக்கிறார். பிப்ரவரி 9, 10, 11 ஆகிய தேதிகளில் நடந்த மூன்று நாள் பொதுக்குழுவில் ஒரு மனதாக பையாஜி தேர்வு செய்யப்பட்டார்.  இவர், 2009 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து, 2012, 2015, 2018 என்று தொடர்ச்சியாக 4 வது முறையாக பையாஜி, பொதுச்செயலாளராக தேர்வாகி இருக்கிறார். 2021 வரை அவர் அந்த பதயில் இருப்பார். இப்போது அவருக்கு வயது 70.

நாக்பூரில் நடந்த மூன்று நாள் பொதுக்குழு கூட்டத்தில் 1,500 நிர்வாகிகள் நாடு முழுவதும் இருந்து வந்து கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தலைவர்  தேர்தல் நடைபெறுவது இல்லை. தற்போதைய தலைவர், அடுத்து வர இருக்கும் தலைவரை அறிவிப்பார். பின்னர், அவ்வமைப்பின் பொதுக்குழு அதற்கு அங்கிகாரம் கொடுக்கும். தலைவர் பதவிக்கு அடுத்து, மிகவும் அதிகாரம் உள்ள பதவி பொதுச்செயலாளர் பதவி. ஆர். எஸ்.எஸ் அமைப்பின் அன்றாட நிர்வாக பணிகளைக் கவனிப்பது பொதுச்செயலாளரின் வேலை. தோழமை அமைப்புளுடன் இணைந்து செயல்படுவது இவரது முக்கிய பணிகளில் ஒன்று.  உடல் நிலையை காரணம் காட்டி பையாஜி இந்த தடவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஒதுங்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரையே மீண்டும் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். 

இந்தப் பொதுக்குழுவில், ''தாய் மொழியை போற்றுவோம்; பின்பற்றுவோம்; முக்கியத்துவம் கொடுப்போம்'' என்று தீர்மானங்களில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது. பொதுக்குழு தீர்மானத்தில், ''ஆரம்பக் கல்வி முதல் அனைத்து விதமான கல்வியும் அவரவர் தாய் மொழியில் சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லது இந்திய மொழிகளில் சொல்லித்த  வேண்டும். ஆங்கிலத்தை பின் பற்றத்தொடங்கி இருப்பதால் நம்முடைய தாய்மொழிகள் அழிந்து வருகின்றன. எனவே, தாய்மொழிக் கல்விக்கு பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும். கல்விக் கொள்கையை வகுப்போர் இதை மனதில் வைத்து திட்டங்களை தீட்ட வேண்டும். மருத்துவம், பொறியியல்  உள்ளிட்ட  உயர் கல்வி பயிற்று மொழி, தேர்வு என்று எல்லாமே  இந்திய மொழிகளில் இருக்க வேண்டும். நீட் தேர்வை வரவேற்கிறோம்.

நீட் தேர்வு,  இந்திய குடிமைப் பணிகள்  தேர்வு ஆகியவை இந்திய மொழிகளில் நடத்த தொடங்கி இருப்பதை வரவேற்கிறோம். அதுபோல மற்ற கல்விகளுக்கு இருக்கும் நுழைவுத்தேர்வை இந்திய மொழிகளில் நடத்த வேண்டும். போட்டித் தேர்வுகளையும் இந்திய மொழிகளில் நடத்த வேண்டும். அவரவர் தாய் மொழில் இந்த தேர்வுகளை நடத்துவது அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆர். எஸ்.எஸ் அமைப்பில் இருப்பவர்கள் தங்களுடைய தாய் மொழியிலேயே பேச முக்கியத்துவம் தர வேண்டும். வீட்டிலும் அதைச் செய்ய வேண்டும். சமுக பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை வார்த்தெடுக்க தாய்மொழியால் மட்டுமே முடியும்.

தாய் மொழியால் மட்டுமே அவரவர் கலாச்சாரங்களை வளர்க்க முடியும். தன்னுடைய தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒருவர், மற்றவரின் தாய்மொழிக்கு உரிய மரியாதை கொடுப்பார். மத்திய, மாநில அரசுகள் தாய் மொழியை வளர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசு நிறுவனங்கள் மட்டுமல்லாது சமூக சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மத அமைப்புகள், பத்திரிகைகள் போன்றவைகளும் தாய்மொழிக்கே முக்கியத்துவமும் முன்னுரிமையும் தர வேண்டும் '' என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க