என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்! - ராகுல் காந்தி உருக்கம்

எனது தந்தை கொல்லப்படுவார் என்பது, எனக்கு முன்னரே தெரியும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.


சிங்கப்பூர் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்குக் கல்லூரி மாணவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது கல்லூரி மாணவர்கள் கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் ராகுல் பதிலளித்தார். அதில் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள்
பற்றிக் கேட்டபோது, ;’நானும் பிரியங்காவும், எனது தந்தை ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டிருந்தபோதும்,  பாட்டி இந்திரா கொலை செய்யப்பட்ட போதும் பெரும்  மனத்துயரைச் சந்தித்ததாகவும் அந்த காலகட்டங்களில் நாங்கள் வெளியே செல்ல
வேண்டும் என்றால் குறைந்தது 15 பேர் எங்கள் காவலுக்கு வருவார்கள், எனது பாட்டி இறப்பதற்கு முன்னர் தானும் எனது தந்தையும் ஒரு நாள் கொல்லப்படுவோம் என தன்னிடம் கூறினார்.

எனது பாட்டி கொல்லப்படுவார்கள் என அவர்களுக்கு முன்னரே தெரிந்திருந்தது.   எங்களுடன் சேர்ந்து விளையாடியவர்களே என் பாட்டியை கொன்றது சொல்ல முடியாத வருத்தமளித்தது. எனது தந்தையை கொன்றவர்கள் மீது முன்னர் அதிக ஆவேசம் வந்தது ஆனால், தற்போது அவர்களை, நானும் பிரியங்காவும் மன்னித்துவிட்டோம். இருவரின் கொலைசம்பவங்களிலும் யாரையும் வெறுக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவெத்துள்ளோம். பிரபாகரனின் உடலை தொலைகாட்களில் பார்த்தேன் அது எனக்கு மிகவும் வருத்தமளித்தது. ஒருவரை இவ்வளவு கொடுமையாக கொலைவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விசயம் என கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!