இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த விவசாயிகள் பேரணி! - ஸ்தம்பித்த மகாராஷ்டிரா

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி   மகாராஷ்டிராவில் மிகப் பெரிய பேரணி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் பேரணி

மகாராஷ்டிராவில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது, இதனால் விவசாயிகள் தங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய பொருட்களுக்கு குறைந்த விலையை நிர்ணயிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய கிசான் சபா என்னும் விவசாய அமைப்பு, நாசிக் மாவட்டத்திலிருந்து மும்பை நோக்கி பேரணி நடத்தி, சட்ட சபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த முடிவெடுத்தனர். அதன் படி கடந்த 6 ஆம் தேதி செவ்வாய் கிழமையன்று சில நூறு விவசாயிகள் இணைந்து நாசிக் மாவட்டத்தில் தங்களின் பேரணியைத் துவக்கினர் அவர்கள் அனைவரும் நேற்று தானே வந்தடைந்தனர், இந்தப் பேரணியை கண்ட மற்ற விவசாய அமைப்புகளும் , அரசியல் கட்சிகளும் இவர்களின் பேரணிக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால் நூறு பேரில் துவங்கிய பேரணி தற்போது 30 ஆயிரம் பேரை கடந்துந்துள்ளது.

பேரணி

 

சற்றும் எதிர்பார்காதாத இந்த விவசாயிகளின் பேரணியால்   மகாராஷ்டிரா மாநிலமும் அந்த அரசாங்கமும் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. இந்தப் பேரணி மற்ற மாநில விவசாயிகளின் கவனத்தை இவர்கள் பக்கம் திருப்பியுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த பேரணி திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதனால் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதித்துள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!