வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (11/03/2018)

கடைசி தொடர்பு:16:00 (11/03/2018)

ஸ்கூல் சிறுவனுக்கு சல்யூட் வைத்த கமிஷ்னர்! - வைரலாகும் வீடியோ

பெங்களூருவில் சிறுவனுக்கு சல்யூட் வைத்த கமிஷ்னரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

’உங்களுக்கு மரியாதை வேண்டும் என்றால், முதலில் நீங்கள் பிறருக்கு மரியாதை தர வேண்டும்’. இந்தக் கருத்தை ஒத்த ஒரு நிகழ்வு பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது. தற்செயலாக எடுக்கப்பட்ட வீடியோவில் இந்த நிகழ்வு பதிவானதால், தற்போது சமுக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் பள்ளி சிறுவன், மருத்துவமனையைக் கடந்தபோது,   மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த கமிஷ்னருக்கு, அவன் சல்யூட் வைத்துள்ளான் அதை சிறிதும் தவிர்க்காத கமிஷ்னர், அந்தச் சிறுவனுக்கு மீண்டும் சல்யூட் வைத்துள்ளார். இந்த போலீஸின் பண்பிற்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பெரிய சாகசங்கள் செய்தோ, குற்றங்களை கண்டுபிடிப்பதன் மூலமோ ஒரு போலீஸ் அதிகாரி மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது இல்லாமல், இவரைப் போன்ற எளிமையான சிறந்த செயல்களின் மூலமும் மக்களின் நன்மதிப்பை பெறலாம் என்பதை இந்த அதிகாரி நிரூபித்துள்ளார். ’இவரைப் போன்ற நல்ல பண்புள்ள அதிகாரிகளையே மக்கள் விரும்புவார்கள்’ என நெட்டிசன்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர்.