மனம் திருந்தி சரணடைந்த ரவுடிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த போலீஸார்!

மனம் திருந்தி சரணடைந்த ரவுடிகளுக்கு உத்தரப்பிரதேச போலீஸார் மாலை அணிவித்து மரியாதை செய்ததுடன், அவர்கள் திருந்தி வாழ உதவி செய்வதாக உறுதி அளித்த சம்பவம் நடந்துள்ளது. 

Photo Credit: ANI

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம், குற்றச்செயல்களிலும் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரவுடிகள் வைத்ததே சட்டமாக இருந்து வருகிறது. ரவுடியிஸத்தை ஒடுக்க போலீஸார் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மனம் திருந்தி வாழ்வதாகக் கூறி மீரட் காவல் நிலையத்தில் 16 ரவுடிகள் சரணடைந்தனர். அவர்களை வரவேற்ற போலீஸார், மாலை அணிவித்து மரியாதை செய்தனர். மேலும், அவர்களது  பழைய ரெக்கார்டுகளை அழிப்பதுடன், சமூகத்தில் அந்தஸ்துடன் வாழ்வதற்காக அவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்வதாக போலீஸார் உறுதி அளித்தனர்.

இதுகுறித்து பேசிய மீரட் நகர் எஸ்.பி. மான் சிங், ``மனம் திருந்தி வாழ்வதாகக் கூறி 16 ரவுடிகள் சரணடைந்துள்ளனர். அவர்கள் வாழ்வாதாரத்துக்கான அனைத்து உதவிகளையும் காவல்துறை செய்யும்’’என்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர், போலி என்கவுன்டர்கள் அதிக அளவில் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!