வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (12/03/2018)

கடைசி தொடர்பு:10:57 (12/03/2018)

`பெண்களைப் போற்றும் டி.ஐ.ஜி ரூபா' - வைரலாகும் மியூசிக் ஆல்பம்!

கர்நாடக டி.ஐ.ஜி ரூபா பெண்களைப் போற்றும் விதமாக தான் பாடிய மியூசிக் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். 

டி.ஐ.ஜி ரூபா

கர்நாடக மாநில டி.ஐ.ஜி-யாக உள்ளவர் ரூபா. ஆனால், இந்தப் பெயர் தமிழக மக்களுக்குப் பழக்கமானதுதான். காரணம், "சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறைக்குள் பல நவீன வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. அதற்காக ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது" என்று கூறி தமிழக, கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியவர். இவரின் அதிரடியால் இன்றளவும் கூட கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்குச் சிக்கல்கள் வந்த வண்ணம் உள்ளன. துணிச்சலுக்கு மட்டுமல்ல நேர்மைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கும் அதிகாரிகளில் ஒருவராக டிஐஜி ரூபா வலம் வருகிறார். அதற்கு உதாரணம், பா.ஜ.க-வின் மூத்த தலைவரான உமா பாரதி கைது, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்குப் பாதுகாப்பை குறைத்தது என ஏராளம். 

ஐ.பி.எஸ் பணியில் நேர்மையாகச் செயல்பட்டதற்குப் பல பரிசுகளை வாங்கியிருக்கிறார். துணிச்சலுக்கு மட்டுமல்ல, தான் பணிபுரியும் இடங்களில் எல்லாம் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியவத்துவம் அளிக்கும் இவர், தற்போது பெண்களை ஊக்கப்படுத்தும் விதமாகச் செய்த செயல் வைரலாகி வருகிறது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களை ஊக்கப்படுத்தும் படி, தான் பாடிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 1965-ம் ஆண்டு பாலிவுட்டில் ஹிட் அடித்த காஜல் படத்தில் வரும் "தோரா மன் தர்பன் கேஹலாயே" என்ற பாடலை தனது சொந்தக் குரலில் பாடியுள்ளார். இந்த வீடியோ, அவரது சாதனைகள் மற்றும் குடும்பத்தின் புகைப்பட தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 7-ம் தேதி வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து கூறியுள்ள அவர், "என்னால் பெண்களுக்குச் செய்யப்படும் சிறந்த மரியாதையாக இதை பார்க்கிறேன். இந்த வீடியோவை வெளியிடுவதில் பெருமையடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க