கடவுள் முருகனுக்கு `ஐபோன் 6’ வழங்கி வியப்பூட்டிய பக்தர்!

தமிழ்க் கடவுளாம் முருகனுக்கு, `ஐபோன் 6’ ஒன்றை பக்தர் காணிக்கையாக வழங்கி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்தச் சம்பவம் ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

ஐபோன் 6


கிருஷ்ணா மாவட்டத்தில் மோபிதேவி எனும் இடத்தில் சுப்ரமனிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு, பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை 108 நாள்களுக்கு ஒருமுறை நிர்வாகிகள் எடுத்துக் கணக்கிடும் பணியில் ஈடுபடுவர். வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கோயில் உண்டியல் திறக்கப்பட்டது. எப்போதும்போல் பணம் மற்றும் நகைகள் போன்ற காணிக்கைகள்தான் உண்டியலில் இருக்கும் என்று திறந்தனர் நிர்வாகிகள். 

ஆனால், இம்முறை வழக்கத்துக்கு மாறாகப் பக்தர் ஒருவர், உத்தரவாத கடிதத்துடன்கூடிய புத்தம் புதிய `ஐபோன் 6’ ஒன்றைக் காணிக்கையாகச் செலுத்தி ஆச்சர்யப் படுத்தியுள்ளார். இப்படிப்பட்ட காணிக்கையைப் பார்த்த நிர்வாகம் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துள்ளனர். 

இதைப்பற்றி கோயில் நிர்வாகம் தெரிவிக்கையில், இந்தக் காணிக்கையை யார் உண்டியலில் போட்டனர் என்று தெரியவில்லை. இந்தப் போனை ஏலத்தில்விட்டு அதன் மூலம் வரும் பணத்தைக் கோயில் திருப்பணிக்காகச் செலவிடலாமா அல்லது பக்தர்களின் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாகப் பயன்படுத்தலாமா என்று புரியாமல் உள்ளோம் என்றார். 

இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் அரிது. இதேபோல், 2016-ம் ஆண்டு ஷீர்டியில் உள்ள சாய் பாபா கோயில், 92 லட்சம் மதிப்பிலான இரண்டு வைர நகைகளை பக்கதர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!