`உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய சூரியமின் சக்தி பூங்கா!’ - பிரான்ஸ் அதிபருடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கிவைப்பு | PM Narendra Modi & French President Emmanuel Macron inaugurate the Solar Power Plant

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (12/03/2018)

கடைசி தொடர்பு:17:45 (12/03/2018)

`உத்தரப்பிரதேசத்தின் மிகப்பெரிய சூரியமின் சக்தி பூங்கா!’ - பிரான்ஸ் அதிபருடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கிவைப்பு

உத்தரப்பிரதேசத்தில், மிகப் பெரிய சூரியசக்திப் பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன்
 தொடங்கிவைத்தனர்.

சூரிய ஒளி அதிகம் கிடைக்கும் நாடுகளில், எரிபொருள்களுக்குப் பதில் சூரியசக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று டெல்லியில், சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. இந்தத் திட்டத்தை சுமார் 15 நாடுகள் இணைந்து
செயல்படுத்த உள்ளன. இதற்காக, 860 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநிலத்திலேயே மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலை, ரூ.500 கோடி செலவில்
அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் மூலம் வருடத்திற்கு 15.6 கோடி மெகாவாட் மின்சாரமும், மாதத்திற்கு 1.30 கோடி மெகாவாட்
மின்சாரமும் உற்பத்திசெய்யப்பட்டு, மக்களின் தேவைக்காக வழங்கப்பட உள்ளது.  இந்த மின்சக்தி ஆலையை பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் ஆகியோர் இன்று கூட்டாகத் திறந்துவைத்தனர்.