பிரதமர் மோடியுடன் வாரணாசியில் படகு சவாரி செய்த பிரான்ஸ் அதிபர்!

மோடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற, பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், வாரணாசியில் படகு சவாரி மேற்கொண்டனர். 

இமானுவேல் மேக்ரான்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நான்கு நாள் அரசு முறை பயணமாக, தன் மனைவியுடன் இந்தியா வந்துள்ளார். இன்று காலை வாரணாசி வந்த அவரை, பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச மாநிலக் கவர்னர் ராம் நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்றனர்.

மோடி

உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சன்வே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தி ஆலையைப் பிரதமர் மோடியுடன் திறந்து வைத்தார். மேலும், பதா லல்பூரில் பகுதியில் உள்ள தீன்யாயல் உபாத்யே ஹஸ்தல்கா சன்குல், கைவினைப் பொருள்களுக்கான வர்த்தக மையத்தைப் பார்வையிட்டார். அதன்பின், வாரணாசியில் உள்ள அஸிகாட் பகுதியில் பிரதமர் மோடியும் இமானுவேல் மேக்ரனும் ஒன்றாகப் படகு சவாரி செய்தனர். 

மோடி

இருநாட்டுத் தலைவர்களும் ஒன்றாகப் படகு சவாரியில் பயணம் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!