வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (13/03/2018)

கடைசி தொடர்பு:00:30 (13/03/2018)

குரங்கணி காட்டுத்தீ: பலியானவர்களுக்கு மோடி, ராகுல் இரங்கல்!

குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி, மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சிலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அவர்களில் பலரின் நிலை மோசமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. 

இந்நிலையில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை  வெளியிட்டுள்ளனர்.

குரங்கணி தீவிபத்துக்கு மோடி இரங்கல்

இதுதொடர்பாக மோடி தனது ட்விட்டர் பதிவில், "தேனி காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வருவார்கள்" என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

குரங்கணி தீவிபத்துக்கு ராகுல் இரங்கல்

அதேபோல, ராகுல் தன் ட்விட்டர் பக்கத்தில், "தேனி குரங்கணி காட்டுத்தீயில் பலியானோருக்கும், நேபாள விமான விபத்தில் பலியானோருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார். பலியோனோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்வதாகவும்" தெரிவித்துள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க