கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி திடீர் விலகல்!

கார்த்தி சிதம்பரம் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான வழக்கில் இருந்து நீதிபதி இந்திரஜித் கவுர் திடீரென விலகியுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
மேலும், அவர் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை.
எனவே, அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் (தேடப்படும் நபர்) அனுப்பப்பட்டது. அதன் மூலம் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல
முடியாமல் நேர்ந்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் வழக்குத் தொடர்ந்து, அந்த வழக்கில் சில
நிபந்தனைகளுடன் வெளிநாடு செல்லலாம் எனத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பின்படி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி வெளிநாடு சென்றுவிட்டு, நாடு திரும்பிய அவரை, சென்னை விமான நிலையத்தில் வைத்து சி.பி.ஐ அதிகாரிகள் கைதுசெய்தனர். அதன் பின், அவர் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சில நாள்கள் சி.பி.ஐ. காவலில் இருந்தார். நேற்றுடன் சி.பி.ஐ. காவல் முடிவடைந்த நிலையில் வரும் 24-ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் இன்று டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக கார்த்தி சிதம்பரம் தனக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் அவர் ஜாமீன் மனுவை விசாரித்து வந்த நீதிபதி இந்தர்மீட் கவுர், அந்த வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை, வேறு அமர்வுக்கு மாற்ற உள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!