உங்கள் மாதச் சம்பளத்தில் வரி பிடிக்கப்படுகிறதா? இதையெல்லாம் கொஞ்சம் கவனிங்க..!

வ்வோர் ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கினாலே வருமான வரி தொடர்பாக நிதி ஆலோசனைகளைப் பெறுவது வழக்கம். முறையாக வருமான வரி தகவல்கள் தாக்கல் செய்யாதவர்கள் மீது வருமான வரி ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் வாய்ப்பு இருப்பதால் வருமான வரி செலுத்தவது அவசியம். 

நிறுவனங்களில் பணியாற்றுபவர்களிடம் வரிகள் பிடித்தம் (TDS) செய்யப்படுகிறது. இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் வரி, சரியான முறையில் செலுத்தாமலும், கவனக்குறைவால் தவறான பான் எண்ணைக் குறிப்பிட்டிருந்தாலும்,  நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும், வரி செலுத்துபவர் கூடுதலாக வரியைச் செலுத்த வேண்டியிருக்கும்.  

 

                                      


சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், 447 நிறுவனங்கள் சரியான வரியைச் செலுத்தாமல் ரூ.3,200 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. 'இந்த மோசடி பணம் அனைத்தும் அரசாங்கத்தின் கணக்கில் காட்டப்படாதவை' என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு நிறுவனங்களின் மீது வழக்குப் பதிந்ததோடு, சில வழக்குகள் தொடர்பாக சில உத்தரவுகளும் போடப்பட்டுள்ளன. இதுபோன்று மோசடி செய்யும் நிறுவங்களின் மீது 276 பி பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, குறைந்தபட்சம் மூன்று மாதங்களும் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகளும் சிறைத்தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.


வருமான வரிச் சட்டத்தின் கீழ் நிறுவனங்கள் அனைத்தும் TDS செலுத்துவது ஒரு சட்டபூர்வமான கடமையாகும். நிறுவனம் வரியை எளிதாகச் செலுத்துவதற்காக வருமான வரித்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட வங்கி மூலமாகவும், வருமான வரித்துறையின் இணையதளத்திலும் செலுத்தலாம். இதற்காக காலாண்டுக்கு ஒருமுறை வரியைச் செலுத்தவும் அனுமதி வழங்குகிறது. அதேபோல், மார்ச் மாதத்திற்கான வரியை ஏப்ரல் மாதம் 30-ம் தேதிக்குள் கட்டவும் அனுமதிக்கப்படுகிறது.

வரி செலுத்தியது தொடர்பான குறுஞ்செய்தியை உடனுக்குடன் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய அரசு. இந்த வசதி 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு காலாண்டிலும் நாம் குறுஞ்செய்தி மூலம் வரி செலுத்திய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். தற்போதுள்ள காலகட்டத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால், வரி செலுத்துதல் தொடர்பாக நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதிலும் அதிக கவனம் செலுத்துவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமானவரித்துறை, வருமான வரி செலுத்துபவர்களின் கணக்குகளை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்வையிட்டு வருகிறது. வருமான வரித்துறையின் பாதிப்புகளிலிருந்து தப்பிப்பதற்கு பதிலாக, முறையாக வருமான வரி செலுத்துகிறோமா என்பதை கவனிப்பது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!