வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (14/03/2018)

கடைசி தொடர்பு:12:50 (14/03/2018)

சின்னத்திற்கு லஞ்சம்- டெல்லி உயர் நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்

ஆர்.கே.நகர் இடத்தேர்தலின்போது, இரட்டை இலை சின்னம் தனக்குக் கிடைக்க, தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டி.டி.வி.தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் ஆஜராகியுள்ளார். 

தினகரன்

இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம், தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, டெல்லி போலீஸார் தினகரன் மீது வழக்குப்பதிவுசெய்தனர். மேலும், போலீஸாரிடம், சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின்படி, தினகரன், அவரது நண்பர் மல்லிகார் ஜுனா மற்றும் ஹவாலா ஏஜென்ட்டுகளிடம் விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு விசாரணை, டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்திலிருந்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.  இந்த குற்றச்சம்பவம் தொடர்பான வழக்கு, விசாரணைக்கு வந்தது. தினகரனுக்கு ஏற்கெனவே கோர்ட்டு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தினகரன் மற்றும் அவரின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள்.