ஆன்மிகச் சுற்றுப் பயணத்தின் ஒருபகுதி... ரிஷிகேஷில் ரஜினி

ரஜினி

இமயமலையில் ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ரஜினி, இன்று ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்துக்குச் சென்று தரிசித்துள்ளார்.

ஆன்மிகம்

தமிழகத்தில் செயல்திறன் கொண்ட அரசியல் தலைவர்கள் இல்லை, அதனால் தமிழக அரசியலில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி கூறினார். மேலும், தமிழக அரசியல் களத்தில் பெரிய வெற்றிடம் உள்ளதாகக் கூறி அரசியல் பிரவேசம் எடுத்தார் ரஜினி. அதன்பின், சுறுசுறுப்பாக அரசியல் தொடர்பான செயல்களைத் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் என்று புறப்பட்டுச் சென்றார். 

ரஜினி

பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆன்மிகப் பயணத்தில் அரசியல் பேசமாட்டேன் என்று கூறிய ரஜினி, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அமித்தாப்பச்சன் உடல்நிலை தேறுவதற்காகப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார். இது தமிழக அரசியல் கட்சியினர் மத்தியில் விவாதப் பொருளாக மாறியது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்தா ஆசிரமத்துக்குச் சென்று ரஜினி தரிசனம் செய்துள்ளார். ஆசிரமத்தில் அவர் சுவாமி தரிசனம் செய்யும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!