விஷம் கலந்த தண்ணீரைக் குடித்ததால் 14 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தின் கிணற்று நீரை குடித்ததால் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவத்மால் என்ற கிராமத்தில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் இருக்கும் நீரில் நச்சு
கலக்கப்பட்டுள்ளது. இந்த நீரைக் குடித்ததால் கடந்த 24 மாதங்களில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் ஆபத்தான
நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நீரை குடித்ததால் பலருக்குச் சிறுநீரகப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பேசிய அப்பகுதி தனியார் மருத்துவமனை மருத்துவர், யவத்மால் கிராமத்தில் உள்ள கிணற்றில் அதிகளவு நைட்ரேட்
கலந்துள்ளதால்தான் இது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கிராம மக்களுக்குச் சிகிச்சை
அளிப்பதற்காகவும் அவர்களின் நிலையை அறிந்துக்கொள்வதற்காவும் அங்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். இந்தப் பிரச்னை குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!