வெளியிடப்பட்ட நேரம்: 15:41 (14/03/2018)

கடைசி தொடர்பு:18:00 (14/03/2018)

உ.பி இடைத்தேர்தல்! - பா.ஜ.க படுதோல்வி; மாயாவதி- அகிலேஷ் கூட்டணி அபார வெற்றி #LiveUpdates

*கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் பிரவீன்குமார் பா.ஜ.க வேட்பாளரைவிட சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

* புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ஆதித்யநாத்

*புல்பூரில் பா.ஜ.க வேட்பாளரைவிட 59,613 வாக்குகள் அதிகமாக பெற்று சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதீப் சிங் வெற்றி பெற்றுள்ளது. 

*உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மற்றும் புல்பூர் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி முன்னிலை வகிப்பதை தொடர்ந்து கட்சி அலுவலகங்களின் முன்பு கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன.

கோரக்பூர்
 

* 3 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை ; கோரக்பூரில் 19 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு ; சமாஜ்வாடி வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் 28,737 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 

Nagendra Pratap Singh Patel

* 28வது சுற்று முடிவில், புல்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 47,351 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 

 

கோரக்பூர்

*சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோவிந்த் சௌத்ரி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதியை சந்தித்து பேசினார். உத்தரபிரதேச இடைத்தேர்தலில்  பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

*பீகாரில் அராரியா தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 23,187 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் வகிக்கிறது. ஜெகனாபாத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம் 52, 609 வாக்குகளுடன், பப்புவா தொகுதியில் பா.ஜ.க 40,501 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், இரு தொகுதிகளில் நடந்து முடிந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. 

கோரக்பூர்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் தொகுதியில் பா.ஜ.க எம்.பி-யாக இருந்த யோகி ஆதித்யநாத், கடந்த ஆண்டு அம்மாநிலத்தின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவரின் எம்.பி பதவியை ராஜிநாமா செய்தார். அதேபோல, புல்பூர் தொகுதியின் எம்.பி-யாக இருந்த கேசவ் பிரசாத் மௌர்யா, துணை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால், இவரும் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

இருவரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி, அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. கோரக்பூர் தொகுதியில் கடந்த 5 முறையாக யோகி ஆதித்யநாத் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்திவருகிறார். பா.ஜ.க-வின் பரம எதிர்க்கட்சிகளாக உள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதியும் இணைந்துள்ளதால், இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க