ராமர் பாலத்தை இடிக்க மாட்டோம்; சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம்! - உறுதியளித்த மத்திய அரசு

ராமர் பாலத்திற்கு எந்தவகை சேதமும் ஏற்படாமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. 

ராமர் பாலம்

சேது சமுத்திரத் திட்டம் என்பது, பாக் ஜலசந்தியையும், மன்னார் வளைகுடாவையும் இணைக்கும் ஆடம்ஸ் அல்லது ராமர் பாலம் எனச் சொல்லக்கூடிய பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாய். இந்தத் திட்டத்தினால், இந்துக்களின் நம்பிக்கையில் பெரிதாகப் போற்றப்படும் ராமர் பாலம் அகற்றப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு பல இந்துவா அமைப்பு மற்றும் அரசியல் கட்சிகளும், தங்களின் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. இந்நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல ஆய்வு நிறுவனம், ராமர் பாலம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. அதில், ராமர் பாலம் மனிதர்களால் உருவாக்கப்பட மணல் திட்டுகள்தான் காரணம் எனத் திட்டவட்டமாக தெரிவித்தது. 

உச்ச நீதிமன்றம்

மேலும், சேது சமுத்திரத் திட்டத்திற்காக ராமர் பாலத்தை அகற்றக் கூடாது என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வு முன் வாதத்துக்கு வந்தது. அப்போது, ராமர் பாலத்திற்கு எந்தவித அச்சுறுத்தலோ, சேதமோ ஏற்படுத்தாமல், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என மத்திய அரசு உறுதியளித்து, பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்தது. மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் பிங்கி ஆனந்தன் இந்த பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்து, மத்திய அரசு குறிப்பிட்டதைத் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!