`ஜன கண மன பாடலைத் திருத்துங்கள்..!’ - காங்கிரஸ் எம்.பி-யின் தனிநபர் தீர்மானம்

தேசிய கீதத்தில் உள்ள ‘சிந்து’ என்ற வார்த்தையைத் திருத்தம் செய்யக்கோரி, மாநிலங்களவையில் தனி நபர் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார் காங்கிரஸ் எம்.பி ரிபின் போரா. 

எம்.பி ரிபின் போரா

நமது தேசிய கீதத்தில் இடம் பெற்றுள்ள `சிந்து’ என்ற வார்த்தை நாட்டின் எந்தப் பகுதியையும் குறிக்கவில்லை. அதனால், தேசிய கீதத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என, தனி நபர் தீர்மானத்தை, காங்கிரஸ் எம்.பி ரிபின் போரா மாநிலங்களவையில் இன்று கொண்டு வந்துள்ளார். 

அந்தத் தீர்மானத்தில், இந்தியாவில் முக்கியம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படும், வடகிழக்கு மாகாணத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் தேசிய கீதத்தில் இடம்பெறவில்லை. அதனால், `சிந்து’ என்ற வார்த்தையைத் திருத்தி `வடகிழக்கு இந்தியா’ என்று திருத்தம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். 

தனி நபர் தீர்மானம்

மேலும், 1950-ம் ஆண்டில், இந்திய ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஜனவரி 24-ம் தேதி அன்று அரசியலமைப்பு சபையில், ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், ஜன கண மன என்ற சொற்கள் மற்றும் இசை, இந்தியாவின் தேசிய கீதம் உள்ளடக்கிய அமைப்பு ஆகும். இவ்வகை சொற்களை மாற்றி அமைப்பதற்குச் சந்தர்ப்பம் எழுந்தால், அரசாங்கம் அங்கீகாரத்துடன் மாற்றி அமைக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோடிட்டு, `சிந்து’ என்ற வார்த்தையை மாற்றி அமைக்கத் தனி நபர் தீர்மானத்தை இன்று கொண்டு வந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!