`2019-ல் ராகுல்காந்திதான் பிரதமர்' - அடித்துச் சொல்லும் சித்தராமையா! | Nobody can stop Rahul Gandhi from becoming PM in 2019 says Siddaramaiah

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (17/03/2018)

கடைசி தொடர்பு:18:20 (17/03/2018)

`2019-ல் ராகுல்காந்திதான் பிரதமர்' - அடித்துச் சொல்லும் சித்தராமையா!

வரும் 2019-ம் ஆண்டு ராகுல்காந்தி பிரதமர் ஆவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனக் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

ராகுல்காந்தி

photo credit: @INCIndia

காங்கிரஸ் கட்சியின் 84 வது தேசிய மாநாடு இன்று தொடங்கி இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது. சமீபத்தில் தலைவராகப் பொறுப்பேற்ற ராகுலகாந்தி தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநில முதல்வர்கள், மாநிலத் தலைவர்கள் என பல ஆயிரக்கணக்கானோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, நாட்டின் முக்கிய பிரச்னைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்படவுள்ளது. முன்னதாக மாநாட்டில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தாரமையா, "வரும் பொதுத்தேர்தலில் ராகுல்காந்தி பிரதமர் ஆவதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. மதவாதத்துக்கும் - மதச்சார்பின்மைக்கும் இடையே கர்நாடகாவில் போட்டி உருவாகியுள்ளது. ராகுல் தலைமையின்கீழ் நாங்கள் கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிப்போம்" என்றார். 

இதேபோல் ராகுலும் மாநாட்டில் உரையாற்றினார். அதில், "நாட்டை ஒன்றிணைக்கவும் முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லவும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். இந்த நாடு எல்லோருக்கும் சொந்தமானது. ஆனால், பா.ஜ.க கோபத்தைப் பயன்படுத்துகிறது. காங்கிரஸோ அன்பை பயன்படுத்துகிறது. அனைவரின் நலனுக்காவும் காங்கிரஸ் பாடுபடும். முன்னேற்றத்துக்கான வழியைத் தேடி சோர்ந்துவிட்டது. கங்கிரஸால் மட்டுமே முன்னேற்றத்துக்கான வழியைக் காட்ட முடியும்" என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க