சுங்கச்சாவடி ஊழியரைத் தாக்கிய பா.ஜ.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஜீட்மல் கான்ட்

சுங்கச் சாவடியில் தன்னிடம் கட்டணம் வசூலித்த ஊழியரைச் சரமாரியாகத் தாக்கி சர்ச்சையில் சிக்கியுள்ளார் முன்னாள் பா.ஜ.க எம்.பி ஜீட்மல் கான்ட். இவர், ஊழியரைத் தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஜீட்மல் கான்ட்

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம்.பி-யான ஜீட்மல் கான்ட், நேற்று தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றுள்ளார். அப்போது, ராஜஸ்தான் மாநிலம், பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள உதய்பூர் சாலையில் வழியே பயணித்தபோது சுங்கச் சாவடியைக் கடக்க நேர்ந்தது. அப்போது, சுங்கச் சாவடியின் ஊழியர் அவர்களிடம் கட்டணம் வசூலித்தார். 

இதனால், ஆத்திரம் அடைந்த ஜீட்மல் கான்ட், காரை விட்டு இறங்கி, கட்டணம் வசூலித்த சுங்கச் சாவடி ஊழியரின் கண்ணத்தில் பளார் என்று அறைந்தது மட்டுமல்லாமல் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இவரின், இந்தச் செயலுக்குப் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க-வை சேர்ந்த தலைவர்களும் விமர்சித்து கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இவர், ஊழியரைத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!