ஸ்டீபன் ஹாங்கிங் வேதங்களைப் பற்றிப் பேசினாரா இல்லையா? - மத்திய அறிவியல் அமைச்சருக்கு இணையவாசிகள் பதிலடி | India's science minister claims Stephen Hawking had said Vedic theory

வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (17/03/2018)

கடைசி தொடர்பு:18:32 (17/03/2018)

ஸ்டீபன் ஹாங்கிங் வேதங்களைப் பற்றிப் பேசினாரா இல்லையா? - மத்திய அறிவியல் அமைச்சருக்கு இணையவாசிகள் பதிலடி

ஹர்ஷ் வர்தன்

105 வது இந்திய அறிவியல் காங்கிரஸின் தொடக்க நிகழ்ச்சியில் `ஐன்ஸ்டீனின் E=MC^2 கோட்பாட்டைவிட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளதாக ஸ்டீபன் ஹாக்கிங்கே ஒருமுறை சொல்லியிருக்கிறார்’ என அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹர்ஷ் வர்தன்
 

டெல்லியில் உள்ள மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பங்குபெற்ற 105வது இந்திய அறிவியல் மாநாடு நேற்று நடந்தது.  நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசிய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் “சமீபத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாங்கிங்கை நாம் இழந்திருக்கிறோம். ஐன்ஸ்டீனின்  E=Mc^2 சமன்பாட்டை (equation)விட உயர்ந்த கோட்பாடுகள் வேதங்களில் உள்ளதாக ஸ்டீபன் ஹாங்கிங்கே கூறியிருக்கிறார்’ என ஹர்ஷ் வர்தன் பேசினார்.

அவரின் பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காரணம் நாட்டின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியதைப் போன்று  ஸ்டீபன் ஹாங்கிங் வேதங்களைப் பற்றி பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கூகுளில் தேடிப் பார்த்ததில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற பெயரில் செயல்பட்டு வந்த முகநூல் கணக்கில் 6 ஆண்டுகள் முன்பு ஸ்டீபன் ஹாக்கிங் வேதங்கள் பற்றி பேசியதைப்போன்று பதிவிடப்பட்டுள்ளது. அந்தப் போலி முகநூல் கணக்கின் அட்மின் Hari. Scientist என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி வேதங்களைப் பற்றி ஹாக்கிங் பேசியதற்கு எந்த நேரடி ஆதாரமும் இல்லை. ஹர்ஷ் வர்தன் மோடியுடன் இருப்பதுபோன்ற புகைப்படங்களை நெட்டிசன்ஸ் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர். 

இதனிடையே இதுபற்றி ஹர்ஷ் வர்தனிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர் ‘நீங்கள் செய்தியாளர்கள்தானே. உங்கள் நேரத்தை செலவுசெய்து அந்த ஆதாரத்தை நீங்கள்தான் தேட வேண்டும். வேதங்களில் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டைவிட உயர்த்த கருத்துகள் உள்ளதாக ஸ்டீபன் ஹாக்கிங் பதிவு செய்துள்ளார். உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நான் ஆதாரத்தைத் தருகிறேன்’ என்றார்.

ஹர்ஷ் வர்தன்
 

இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. Telegraph India என்னும் செய்தி தளத்தில் ஒருசில விஞ்ஞானிகளிடம் ஹர்ஷ் வர்தன் பேசியது பற்றி கேள்வி எழுப்பி அவர்களின் பதிலை செய்தியாக்கி உள்ளனர். ‘இது பொறுப்பற்ற பேச்சு. ஹர்ஷ் கூறியது போன்று ஸ்டீபன் ஹாக்கிங் வேதங்கள் பற்றி பேசவில்லை’, ‘நாட்டின் அமைச்சராக இருந்துகொண்டு இவ்வாறு பேசியது இந்தியாவுக்கு அவப்பெயரை உண்டாக்கும்...’ என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க