'ரூ.4 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்' - பரபரப்பு புகார் அளித்த ராகுல் டிராவிட்!

பெங்களூரை சேர்ந்த நிறுவனம் தன்னிடம் ரூ.4 கோடி மோசடி செய்துள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் போலீஸில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராகுல் டிராவிட்

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் தற்போது ஜூனியர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், பெங்களூரு சதாசிவநகர் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது, கடந்த 2015 விக்ரம் இன்வெஸ்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தில் 20 கோடி முதலீடு செய்துள்ளார். 2015 - 17 ஆண்டுகளில் வட்டி அடிப்படையில், ரூ.16 கோடியை திருப்பி செலுத்தியுள்ளது. ஆனால் மீதமுள்ள நான்கு கோடி ரூபாயை திருப்பி தராமல் இழுத்தடித்து மோசடி செய்துள்ளது. இதனால் தற்போது  டிராவிட்  புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் 5 பேரை கைது செய்துள்ள போலீஸார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில், காமாடிட்டி மார்க்கெட்டிங்கில் முதலீடு செய்ததால் 40 - 50 சதவீதம் பங்குகள் தருவதாக கூறி, டிராவிட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்களிடம் இவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நிறுவனம் மோசடி செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். பிரபல கிரிக்கெட் வீரரிடம் நான்கு கோடி ரூபாய் மோசடி செய்துள்ள சம்பவம் விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!