'டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆபரேஷன்'.. பீகாரில் பரபரப்பு..வைரலாகும் வீடியோ..

பீகார், சர்தார் மருத்துவமனையில், மின்சார தட்டுப்பாடு காரணமாக, பெண் ஒருவருக்கு டார்ச் லைட் வெளிச்சத்தின் உதவியுடன் ஆபரேஷன் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

டார்ச் லைட்

 

நிதீஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் கட்சி பீகாரில் ஆட்சி செய்து வருகிறது. இங்கு, பொதுமக்களுக்கான அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத அவலம் உருவெடுத்துள்ளது. சஹார்சா எனும் பகுதியில் செயல்பட்டு வரும் சர்தார் மருத்துவமனையில், இன்று சாலை விபத்தில் சிக்கி பலத்த காயத்துடன்  பெண் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அப்பெண்ணுக்கு ஆபரேஷன் செய்யும் சமயத்தில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதியில்லாத காரணத்தால்  டார்ச் வெளிச்சத்தின் உதவியுடன் வலது கையில், நேர்த்தியாக ஆபரேஷன் செய்து முடித்துள்ளனர். டார்ச் லைட் வெளிச்சத்தில் ஆபரேஷன் செய்யும் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து, சர்தார் மருத்துவமனை அதிகாரிகள் எவ்வித விளக்கங்களையும் முன்வைக்கவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!