'அரசியல் வித்தைகளில் ஈடுபடுவதில் சந்திரபாபு நாயுடுவை மிஞ்ச முடியாது' - ராம் மாதவ் அதிரடி

மோடி அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் டி.டி.எஸ் கட்சிகள் முனைப்புக் காட்டிய நிலையில், எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால், இன்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்கப்படவில்லை. 

ராம் மாதவ்

இந்நிலையில், இதுகுறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைப் பற்றி பா.ஜ.க பொதுச்செயலாளர் ராம் மாதவ் விமர்சித்துள்ளார்.

பா.ஜ.க பொதுச்செயலாளர் ராம் மாதவ், ''நம்பிக்கையில்லா தீர்மானம்குறித்து நாங்கள் பயப்படவில்லை. இது, தெலுங்கு தேசம் கட்சியின் அரசியல் நாடகம் ஆகும். திடீரென உணர்ச்சிரீதியான ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சிப்பது ஆந்திர அரசின் மீதான மக்களின் நிலைப்பாட்டை மாற்றுவதே. சந்திரபாபு நாயுடு விளையாடும் அரசியல் விளையாட்டில், யாரும் அவரை வெல்ல முடியாது. அவர், விருப்பமுடன் அரசியல் வித்தைகளில் ஈடுபடுவதில் பிரபலமானவர்''

''ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் கோரிக்கை வைத்தால், அவருடன் நாங்கள் இருக்கிறோம். ஆனால், அவர் பேசிவருவதில் பெரும்பாலானவை அரசியல் நாடக விளையாட்டுகளே இடம்பெறுகின்றன. அரசியல் நாடகத்தையே அவர் நடத்துகிறார்'' என ராம் மாதவ் குற்றம் சாட்டியுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!