ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்! 4 ஆண்டு மர்மத்தை விலக்கிய சுஷ்மா

கடந்த 2014-ம் ஆண்டு ஈராக்கில் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டதாக, அதிர்ச்சித் தகவலை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். 

சுஷ்மா சுவராஜ்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், கட்டுமானப்பணிக்காக 2014-ம் ஆண்டு ஈராக் நாட்டுக்குச் சென்றனர். ஈராக், மொசூல் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்தபோது, அந்நகரில் வசித்த 39 இந்தியர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட இந்தியர்களில் நிலை குறித்த தகவல் இதுவரையிலும் தெரியாமல் இருந்துவந்த நிலையில் அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக சுஷ்மா அதிர்ச்சி தகவலை இன்று வெளியிட்டார்.

மேலும், கடத்தப்பட்ட 38 பேரின், டி.என்.ஏ மாதிரிகள், அங்கு இறந்தவர்களின் டி.என்.ஏ-வுடன் ஒத்துள்ளதாக,  தகவல்கள் நேற்றுதான் பெறப்பட்டதாகவும், இதில், 39 நபரின் டி.என்.ஏ சதவிகிதம் ஒத்துப் போயுள்ளதாகத் தெரிவித்தார். 

கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்டுத்தரக்கோரி, 39 பேரின் குடும்பத்தினர் மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதனையடுத்து, 2017-ம் ஆண்டு, மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் அவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற தகவலை, சுஷ்மா சுவராஜ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வர அமைச்சர் வி.கே.சிங் ஈராக் சென்றுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!